Celebration for D Imman in Annathae Shooting Spot

விசுவாசம் திரைப்படத்திற்காக இமானுக்கு தேசிய விருது கிடைத்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் இதனை கொண்டாடியுள்ளனர்.

Celebration for D Imman in Annathae Shooting Spot : இந்திய சினிமாவில் 2019ஆம் ஆண்டு வரை வெளியான திரைப் படங்களுக்கு தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் தனுஷ் விஜய் சேதுபதி ஆகியோருக்கு சிறந்த நடிகர் மற்றும் துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் விசுவாசம் திரைப்படத்தின் இசைக்காக இமான் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரஜினி விஜய் போன்ற பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

விசுவாசத்திற்காக இமானுக்கு கிடைத்த தேசிய விருது.. அண்ணாத்த படப்பிடிப்பில் கொண்டாட்டம்.!!

இதில் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இமானுக்கு தேசிய விருது கிடைத்ததை கொண்டாடி உள்ளனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு இமான் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.