மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி உள்ள மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சிம்பு, அரவிந் சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி என நான்கு ஹீரோக்களும் ஜோதிகா, டயானா, அதிதி ராவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என 4 ஹீரோயின்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர், டீஸர் ஆகியவை இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் நாளை (செப்டம்பர் 22)-ல் வெளியாக இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.