சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருந்ததாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Cauvery Hospital About Rajinikanth Health : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நேற்று திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

ரஜினிக்கு மூளையில் அடைப்பு.. காவேரி மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது அகற்றப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.