Case on Vishnu Vishal

மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்ட விஷ்ணு விஷால் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Case on Vishnu Vishal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு முண்டாசுப்பட்டி, நீர்ப்பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு செய்துள்ளார்.

இதனை அடுத்து குடியிருப்பு நல சங்க செயலாளர் ரங்க பாபு கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

ஒரு நடிகர் குடிபோதையில் அட்டகாசம் செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.