Case against Dhoni
Case against Dhoni

அம்ரபலி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி மீது எஃப்ஐஆர் பதிய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அனில் ஷர்மா என்பவரால் துவங்கப்பட்ட அம்ரபலி நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்த தோனியை குற்றவாளியாக கருதி எஃப்ஐஆர் போட வேண்டும் என அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஏழு தனித்தனி குழுக்கள் புகார் அளித்துள்ளன.

துவக்கம் முதலே தோனியையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என பலர் கூறி வந்தனர்.

இடையே தோனி சார்பாக அவருக்கு விளம்பர தூதராக நிறைய பணம் பாக்கி உள்ளது என ஒரு வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது. இந்த நிலையில், ஜூலை 23 அன்று அம்ரபலி மோசடி வழக்கின் ஒரு கிளை வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.

டிசம்பர் 2 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருவதால் டெல்லி பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பிக்க உள்ளது. அதில் தோனி மீதான புகார் பற்றி நிச்சயம் தகவல்கள் இடம் பெற்று இருக்கும் என கருதப்படுகிறது.