Carrot Soup Recipe
Carrot Soup Recipe

தேவையான பொருட்கள் :

கேரட் – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 10,
மைசூர் பருப்பு – 100 கிராம்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
பால் – அரை கப்,
கொத்தமல்லி – கைப்பிடி
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

1) ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

2) மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து, வேக வைத்து அரைத்து க்கொள்ள வேண்டும்.

3) பின்னர் பருப்பை வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பருப்புகளைச் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.

4) பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவைச் சேர்த்து இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here