Carrot Sadam Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Carrot Sadam Recipe :

தேவையான பொருட்கள்:

அரிசி – 4 கப்,
கேரட் – 6,
வறுத்த நிலக்கடலை – 3 ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய்- ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்- 5,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
சீரகம்- 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம்- அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை- சிறிதளவு.

செய்முறை:

இயற்கை வீட்டு ஷாம்பூவான சீயக்காயின் நன்மைகளை தெரிந்து கொள்ளலாமா?

1) அரிசியை உதிரி உதிராக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.

2) அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் . தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இத்துடன் துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.

3) கேரட் வெந்ததும், வறுத்த நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.

4) கேரட் கலவையை ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

5) சுவையான ஆரோக்கியமான கேரட் சாதம் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here