Carrot Beans Rice :
Carrot Beans Rice :

Carrot Beans Rice :

எளிதில் தயாராகும் உணவு என்றால் அதில் சத்து குறந்து விடும் என்பது பலரது கருத்து ஆனால் எளிமையாகவும், சத்தகவும் இருக்கும் உணவில் ஒன்று தான் இந்த கேரட்-பீன்ஸ் சாதம். இது பள்ளிக்கு மத்திய உணவாக கொடுக்க ஏற்ற உணவு.

தேவையான பொருட்கள் :

  1. கேரட் – 2
  2. பீன்ஸ் – 3
  3. பச்சை மிளகாய் – 1
  4. சீரகம், எள் – 1 ஸ்பூன்
  5. கடலைபருப்பு – 1 ஸ்பூன்
  6. மிளகு – ½ ஸ்பூன்
  7. பட்டை – சிரிய துண்டு
  8. கொத்தமல்லி – சிறிதளவு
  9. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

முதலில் சாதம் வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், கேரட்டை கழுவி பின் அதனை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொடியாக நறுக்கிய பீன்ஸ் ஒரு பக்கம் எடுத்து வைதுக்கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், எள், கடலைப்பருப்பு, மிளகு, பட்டை சிறிது போட்டு லேசாக வறுத்து எடுத்துக் பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அதில் துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கியதும் அதில் வேக வைத்து உள்ள சாதம் சேர்த்து பின் அதில் தயாரித்து வைத்துள்ள பொடி, உப்பு சேர்த்து சாதம் உடையாமல் கலந்து விட்டு சாதம் சூடானதும், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான கேரட்-பீன்ஸ் சாதம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here