Carrot Alwa
Carrot Alwa

Carrot Alwa :

திடீரென்று வீட்டிற்கு விருந்தாளி வந்தார்கள் என்றால் இந்த கேரட் அல்வா நமக்கு கை கொடுக்கும் ஒரு எளிமையான இனிப்பு வகை ஆகும். இதனை மிகவும் எளிதாக செயலாம்.

தேவையான பொருட்கள் :

1. கேரட் – 4

2. பால் – 200 மில்லி

3. பாதம் பருப்பு – 2

4. முந்திரி பருப்பு – 6

5. ஏலக்காய் தூள் – சிறிது

6. நெய் – 5 ஸ்பூன்

7. சர்க்கரை – 1 கப்

செய்முறை :

முதலில் கேரட்டை தோல் நீக்கி, துருவிக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பால் ஊற்றி சூடானதும் அதில் துருவிய கேரட் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரதில் சுடுதண்ணீரில் பாதம் பருப்பை ஊற வைத்து தோலுரித்து முந்திரி பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, முக்கால் பங்கு வேந்த கேரட்டில் பொடித்து வைத்துள்ள பாதம் மற்றும் முந்திரி பொடி, சர்க்கரை சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.

இதற்கு இடையே நெய் ஊற்றி அடி பிடிக்காமல் கிளற வேண்டும். முழுவதுமாக கேரட் பாலில் நன்றாக வெந்ததும், அதில் மீண்டும் சிறிது நெய் ஊற்றி, கொஞ்சம் ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கிளற வேண்டும். இதனை வேறு பாத்திரதில் மாற்றி பரிமாறினால் சுவையான கேரட் அல்வா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here