Captain Vijayakanth Read Kandha Sasti Kavasam
Captain Vijayakanth Read Kandha Sasti Kavasam

கேப்டன் விஜயகாந்த் பழையபடி மீண்டு வந்துள்ளார்.

Captain Vijayakanth Read Kandha Sasti Kavasam : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சங்க தலைவராக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டார்.

அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக வளர்ந்தார். அதன் பின்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக முடங்கிப் போனார் விஜயகாந்த்.

அவரோடு சேர்ந்து அவரது அரசியல் கட்சியினர் சறுக்கத்தை சந்தித்தது. இருப்பினும் தொடர்ந்து தேமுதிக தனக்கான இடத்தைத் தக்க வைக்க முயற்சித்து வருகிறது.

விஜயகாந்த் தான் ரியல் ஹீரோ.. புகழ்ந்து தள்ளிய மெகா ஸ்டார்.!

கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல்நிலை தேறி பழையபடி மாறி வருகிறார். இந்த நிலையில் அவர் கந்த சஷ்டி கவசத்தை பாடி அந்த வீடியோவை தண்ணீர் தேக்கலாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அது குறித்த பதிவில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம்.

இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். எனவும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்.

தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா என பதிவிட்டுள்ளார்.