Captain Vijayakanth in USA
Captain Vijayakanth in USA

Captain Vijayakanth in USA – சென்னை: “தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக, இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்” .

சிறுநீரகம், குரல்வளை பாதிப்புகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்படுவதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த்- ஐ அரசியலில் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. விஜயகாந்தை வைத்து பல மீம்ஸ் வந்துள்ளன. இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து, ‘2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு முன்னணி கட்சிகளே அசந்து போய் பார்க்கும் வகையில் வெற்றி பெற்றார்’. பின்னர் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தார்.

இதனால் விஜயகாந்த் அவர்கள் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.

அச்சமயம், 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தார்.

அதன் பிறகு விஜயகாந்திற்கு அரசியலில் தொடர் சறுக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, சிறுநீரகம், குரல்வளை பாதிப்பு போன்ற உடல்நலப் பிரச்சினையால் அவதி ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்று, அங்கு குடும்பத்தினருடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், “கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

இந்நிலையில் சிகிச்சைகளை முடித்து திரும்பி வரும் போது முன்பிருந்த விஜயகாந்தாக வரவேண்டும்” என தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.