தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் இன்று மாலை வெளியாகயுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கேன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.