கேப்டன் மில்லர் டீசரை தொடர்ந்து பார்வையிட்டு வரும் பார்வையாளர்கள் குறித்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சந்தீப் கிஷன் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்ததை தொடர்ந்து தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் டீசரை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படகுழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வசனமே இல்லாமல் துப்பாக்கி மற்றும் குண்டுகள் சத்தத்துடன் வெளியாகி இருக்கும் இந்த டீசரில் ஆக்ரோஷமான லுக்கில் இருக்கும் தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து படம் மீதுள்ள ஆர்வத்தை உயர்த்தி வருவதோடு இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இதுவரை 5 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.