தடை விதிக்கப்பட்டிருந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், கன்னட நடிகர் சிவராஜ்குமார், அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் என பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே அதிகரித்து காணப்பட்டு நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அப்போது படக்குழுவினரிடம் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அதில் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்பதால் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதனால் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்காக அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியானதால் சிக்கல்கள் நீங்கி கேப்டன் மில்லர் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வைரலாகி வருகிறது.