ரசிகரின் பதிவால் ஷாக்கான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இயக்குனரின் பதிவு வைரல்.

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ரசிகரின் பதிவால்… ஷாக்கான கேப்டன் மில்லர் இயக்குனர்!!… வெளியான வைரல் பதிவுகள் இதோ.!

இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ரசிகரின் பதிவால்… ஷாக்கான கேப்டன் மில்லர் இயக்குனர்!!… வெளியான வைரல் பதிவுகள் இதோ.!

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பிசியாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் ரசிகரின் பதிவை கண்டு ஷாக் ஆகியுள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு, பலத்த பாதுகாப்புகளுடன், சென்னை செம்மொழிப் பூங்காவில் நடைபெற்று வருவதாக ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவால் ஷாக்கான அருண் மாதேஸ்வரன் இது எப்போ? என்று வியப்புடன் அப்பதிவிற்கு ரீட்வீட் செய்துள்ளார். அந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.