மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்த நடிகர் தனுஷின் வீடியோ ட்ரெண்டிகாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை கலங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வரும் நிலையில் இப்படத்திற்காக நீளமான முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தை மெயின்டெய்ன் செய்து வரும் நடிகர் தனுஷ் அவர்கள் மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்திருக்கும் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.