கடக ராசி, Cancer Benefits 2019

Cancer Benefits 2019 : பிறரின் மனநிலையை சரியாக கணிக்கும் கடக ராசிகாரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நற்பலன்களை அதிகம் தரக்கூடியதாக இருக்கும்.

இந்தப் புத்தாண்டு இடமாற்றம், செலவு, அலைச்சல்களைத் தந்தாலும், அனுபவ அறிவால் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

* ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் தொடர்பான மன பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். முகத்தில் மலர்ச்சி உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும்.

* திருமணம் :
திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்.

* தொழில் :
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.

எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும்.  தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும்.

* குடும்பம் :
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத் தொடங்கும்.

உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்குவீர்கள்.

நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும். வருமானம் அதிகரிக்கும்.

* அரசியல் :
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும்.

* விவசாயம் :
விவசாய தொழிலிருப்பவர்களுக்கு விளைபொருட்களுக்கு கேட்ட விலை கிடைக்கும். கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள்.

* பெண்கள் :
பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.

* மாணவர்கள் :
மாணவர்களுக்கு, சக மாணவர்களின் மத்தியில் பாராட்டு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here