Calls Movie Teaser Record

சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் டீசர் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

Calls Movie Teaser Record : தமிழ் சின்னத்திரையில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக உயர்ந்தவர் சித்ரா.

முழுக்க முழுக்க தன்னுடைய விடாமுயற்சியால் உச்சத்தை தொட்ட இவர் வெள்ளித்திரையிலும் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சியைக் கண்ட சித்ரா ஹேம்நாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படியான நிலையில் சித்ரா சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்ல இது கொலை என பலரும் கூறி வந்தனர்.

இதனால் அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இவருடைய மறைவுக்குப் பிறகு இவர் நடித்திருந்த கால்ஸ் திரைப்படத்தின் டீஸர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இணையத்தில் வெளியானது.

தற்போது இந்த டீசர் யூட்யூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் சித்ராவின் படம் படைத்துள்ள சாதனைகள் பார்க்க அவர் நம்முடன் இல்லையே என அவருடைய ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.