VJ சித்ரா நடித்துள்ள கால்ஸ் படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Calls Movie Review : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் விஜே சித்ரா. இவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடித்துள்ள முதல் மற்றும் கடைசி திரைப்படம் கால்ஸ். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தை பார்க்க முல்லை நம்முடன் இல்லையே என்பது தான் வருத்தமான ஒன்று.

ஜே சபரிஷ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். வினோதினி, தேவதர்ஷினி, ஆர் சுந்தர் ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

கால் சென்டரில் பணியாற்றும் பெண்ணான நடுத்தர குடும்ப பெண்ணான சித்ரா வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்சினையை சந்திக்கிறார். அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. ( சுவாரஸ்யம் கருதி கதையை விவரிக்கவில்லை )

படத்தை பற்றிய அலசல் ‌:

விஜே சித்ரா வழக்கம் போல சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வாழ்கையில் என்ன பிரச்சினைனு கண்டு பிடிக்கிறதுக்குள்ளவே பாதி வாழ்க்கை முடிஞ்சி போய்டுது என உருக்கமாக பேசும் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.

மற்ற நடிகர், நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களை திறம்பட நடித்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை : தமீன் அன்சாரி இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். படத்தின் இசை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு :

படத்தின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. சித்ராவின் நடிப்பு

3. வசனங்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

2. சில இடங்களில் தொய்வு

REVIEW OVERVIEW
Calls Movie Review
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
calls-movie-reviewமொத்தத்தில் கால்ஸ் சித்ராவுக்கு சிறந்த படமாக இருந்திருக்கும். ஆனால் சித்ரா நம்முடன் இல்லையே என்பது தான் வருத்தம்