Calls Movie Release Update

மறைந்த சித்ரா நடித்துள்ள கால்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடி உள்ளனர்.

Calls Movie Release Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் சித்ரா.

மேலும் தொகுப்பாளினியாக இருந்து தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி தனக்கென சின்னத்திரையில் ஒரு இடம் பிடித்தவர் சித்ரா.

இவருக்கு ஹேமந்த் என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில் தன் கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சித்ரா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் அவர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அந்த படத்தின் ரிலீசுக்காக சித்துவின் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.