பிணக் குவியல்களுக்கு நடுவே தமிழ் நடிகை ஒருவர் ரத்தக்களறியுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Cadaver Movie First Look : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு தனுஷ், விஜய், விக்ரம், விஷால், விஷ்ணு விஷால் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். விஜயுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார்.

பிணக்குவியல்களுக்கு நடுவே அமர்ந்து சாப்பிடும் தமிழ் நடிகை.. பார்ப்போரை பதைபதைக்க வைத்த புகைப்படம்
எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது : போதைப் பொருள் தடுப்பு அதிகாரி மனைவி புகார்

இதனையடுத்து படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். சில படங்களில் சோலோ நாயகியாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது அதே போல் சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறார்.

புறநானூறு என்னன்னு நிறைய பேருக்கு தெரியல! – Karu Pazhaniappan Funny Speech | Puram Short Film Launch

காடவர் என்ற பெயரில் உருவாகும் படத்தில் பாரன்சிக்ஸ் சர்ஜனாக நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக இவர் மருத்துவமனை ஒன்றில் ஒரு வாரம் பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மார்ச்சரியில் பிணக்குவியல்களுக்கு நடுவே ரத்தக்களறியுடன் உணவு உண்ணும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.