Buttered Corn Noodles Recipe
Buttered Corn Noodles Recipe

Buttered Corn Noodles Recipe – தேவையான பொருட்கள் :

சோள மாவு – 1/4 கிலோ,
காளான் – 1கப்,
நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
துருவிய குடைமிளகாய் – 1,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை :

1) சோள மாவை வாணலியில் பச்சை வாசனை போகும்வரை வறுத்து ஆற வைத்து சூடான தண்ணீர், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

2) பிறகு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்.

3) வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, நறுக்கிய காளான், கரம் மாசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும்.

4) பிறகு நூடுல்ஸ், மிளகுத் தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

5) சுவையான சோள நூடுல்ஸ் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here