Bumrah rested
Bumrah rested

Bumrah rested – டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஏற்பட்ட ஆட்டசுமையை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவிற்கு, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்., சுற்று பயணம் மேற்கொண்டு இந்தியா அணி விளையாடி வருகிறது. டி-20 போட்டியை 1-1 என்று சமன் செய்தது.

மேலும் அடுத்து விளையாடிய டெஸ்ட் போட்டியில் 2-1 என தொடரை 71 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து இறுதி கட்டமாக 3ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 12-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதில், டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்.

அவர்களில் பும்ராவும் ஒருவர், அந்த போட்டியில் ஏற்பட்ட ஆட்ட சுமை அதிகமாக இருந்ததாலும், வரும் 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை கருத்தில் கொண்டும் அவருக்கு நடக்க இருக்கும் போட்டிகளில் ஓய்வு அளிக்கபட்டுள்ளது.

அதனால், இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தபட்டு உள்ளது. ஒரு நாள் தொடரில் முகமது சிராஜ், சித்தார்த் கௌலும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.