Bumrah is the Best Bowler : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Anupama

Bumrah is the Best Bowler :

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று அரையிறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகக்கோப்பையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமாக பந்து வீசி வருகிறார். 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள அவர், 8 மெய்டன் ஓவர்கள் வீசியதுடன் ஓவருக்கு தலா 4.48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!

இதனால் பும்ரா நியூசிலாந்து அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் விளையாட முடியாத அளவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராகக் கூட அவர் வழக்கமான ரன் விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மற்ற எல்லா பந்து வீச்சாளர்களையும் டார்கெட் செய்தனர். அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள், ஹர்திக் பாண்டியா, டெத் ஓவர்களில் முகமது ஷமி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஷமி அணியில் இடம் பிடிப்பார். இந்த வருட தொடக்கத்தில் அவர் நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக பந்து வீசினார்’’ என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.