சூப்பர் சிங்கர் 9 போட்டியாளர்களுக்கு பைக் பம்பர் ப்ரைஸாக காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் விஜய்யின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 9 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த ரியாலிட்டி ஷோ பலரின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றியமைத்துள்ளது மற்றும் தற்போது உலகளவில் புகழ்பெற்ற பாடகர்களாகவும் விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் 9 போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் பம்பர் ப்ரைஸ் ஜெயிக்க போவது யார்?

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகிறது.சூப்பர் சிங்கர் சீசன் 9, 20 போட்டியாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. தற்போது கடும் போட்டிகளுக்கு பிறது 10 போட்டியாளர்கள் இந்த போட்டியில் உள்ளனர். கிராண்ட் ஃபைனலை நோக்கி நிகழ்ச்சி முன்னேறும் வேளையில் போட்டியாளர்களுக்கு புதுமையான சுற்றுக்கள் வைக்கப்படுகின்றன.

சூப்பர் சிங்கர் 9 போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் பம்பர் ப்ரைஸ் ஜெயிக்க போவது யார்?

வரும் வாரத்தில், ஒவ்வொரு போட்டியாளரும் சிறந்த பாடல்களை மிகச்சிறப்பாக பாடவேண்டும். அவ்வாறு அவர்கள் பாடினால் அவர்களுக்கு பைக் பரிசாக காத்திருக்கிறது. இது ஒரு பரபரப்பான சுற்று மற்றும் இந்த வார எபிசோடில் சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ், விஜய் யேசுதாஸ், ஹரிசரண், ஷ்கதிஸ்ரீ கோபாலன், சத்யபிரகாஷ் என ஆறு சிறப்பு நடுவர்கள் குழு இருப்பார்கள். ஃப்ரீஸ்டைல் சுற்றுக்கு போட்டியாளர்கள் பாடும்போது நடுவர்கள் பஸ்ஸரை அழுத்தினாள் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள் என்று அர்த்தம். அவ்வாறு அவர்கள் குறைந்தது ஐந்து முறை வெற்றிபெறவேண்டும்.

ஒரு போட்டியாளர் 6 பஸர்களை வெல்ல முடியும். அதிகபட்சமாக 60 பஸ்ஸரை வெல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் மொத்தமாக 60க்கு ஐம்பது பஸ்ஸரை வென்றால் 10 போட்டியாளர்களுக்கும் தலா ஒரு பைக் கிடைக்கும். சூப்பர் சிங்கர் சீசன் 9 இசை ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் தனித்துவமான நிகழ்ச்சியாகும்.

சூப்பர் சிங்கர் 9 போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் பம்பர் ப்ரைஸ் ஜெயிக்க போவது யார்?

சீசனின் முடிவில் முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்கள், நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ‘சூப்பர் சிங்கர்’ பட்டத்திற்காக போராடத் தயாராக இருப்பார்கள். வரும் சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் மட்டும் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 9-ஐத் காணத்தவறாதீர்கள்.