வாடிவாசல் படத்தின் பட்ஜெட் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Budget Details of Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா நடித்து முடித்துவிட்டு அடுத்த படங்களுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். சூரியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வாடிவாசல் படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?? எடுக்கலாமா வேண்டாமா? குழப்பத்தில் தயாரிப்பாளர் - ஷாக் தகவல்

இந்த படத்திற்கு பிறகு வாடி வாசல் திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் படத்தின் பட்ஜெட் 98 கோடி, எனக்கு சம்பளம் 20 கோடி சூர்யாவுக்கு சம்பளம் 28 கோடி, படப்பிடிப்பு நடத்துவதற்கான செலவு 30 கோடி என பெரிய பட்ஜெட்டை கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

இதனைப் பார்த்த கலைப்புலி எஸ் தாணு இந்த கொரோனா வைரஸ் பரவல் இன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். இப்படியான காலகட்டத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுக்க கலைப்புலி எஸ் தாணு ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோர் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.