Budget 2019
Budget 2019

Budget 2019 – டெல்லி: 16- வது லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டை இன்று ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான அமைச்சர் பியூஷ் கோயல் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.

16- வது மக்களவையின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

லோக்சபா தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவை நெருங்குவதால், பட்ஜெட் கூட்டதொடரில் விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் நிதியமைச்சர் பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று, சிகிச்சை பெற்று வருவதால், நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மேலும் இது பியூஷ் கோயலின் முதல் பட்ஜெட் ஆகும்., இருப்பினும் தற்போதைய லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டும் இதுவே.