
நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர உள்ளனர் பிரபல சீரியல் ரீல் ஜோடி.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தவமாய் தவமிருந்து. இந்த சீரியலில் மலர் பாண்டி கதாபாத்திரங்களில் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர் பிரிட்டோ மற்றும் சந்தியா.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் தற்போது நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேர உள்ளனர். ஆமாம் பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் காதல் திருமணம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் முகத்தை காட்டாமல் கையில் நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் போட்டோக்களை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
