Brindha Master
டேன்ஸ் மாஸ்டரான பிருந்தா தற்போது இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார். அவருடைய முதல் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Brindha Master Turned Director : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் கலர்ஸ் தமிழில் நடன நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்து வருகிறார்.

தற்போது இவர் முதல் முறையாக இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். இவருடைய முதல் படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். நாயகியாக அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. மணிரத்தினம், சுகாசினி, குஷ்பூ, பாக்யராஜ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இது காமெடி கலந்த காதல் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்திற்கு ஹேய் சினமிகா என பெயரிட்டுள்ளனர், ஜியோ சினிமா நிறுவனம் இப்படத்தின் மூலமாக தமிழ் திரையில் என்ட்ரி கொடுக்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.