தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் அடுத்த அதிரடியா அப்டேட் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிருவனம் தயாரித்து வருகிறது.

தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், விவேக், இம்மான் அண்ணாச்சி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், கோவை சரளா என மிக பெரிய பட்டாளமே நடித்து வருகிறது.

தற்போது இப்படத்தின் தியேட்டர் உரிமையை KJRStudios நிறுவனத்தின் உரிமையாளரான kotapadi ஜே ராஜேஷ் அவர்கள் 70 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை தல ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.