Brahma

☆ ஆதியில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஐந்து முகங்களும் தனக்கே அழகாய் இருக்கின்றது என்று எண்ணிய பிரம்மா கர்வம் கொண்டார்.

☆ விளைவு தேவையில்லாமல் சிவனை நிந்திக்கவும் தொடங்கியுள்ளார். இதனை முதலில் கண்டும் காணாமலும் இருந்த சிவன் பொறுக்க முடியாத அளவுக்கு சென்ற பின்னர் தன்னுடைய அஷ்ட பைரவர் கோலங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். ஒரு தலை போய் நான்கு தலையுடன் விளங்கிய பிரம்மனுக்கு, அன்று முதல் சதுர் முகன் என்ற பெயர் தோன்றியது.

☆ பிரம்மனின் தலையைக் கொய்ததற்கு மேலும் இரு கதைகள் கூறப்படுகின்றன.

☆ கதை–1:
பிரம்மா சத ரூபா என்ற பெண்ணைப் படைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால், அந்தத் தலை கிள்ளி எறியப்பட்டது என்பர்.

☆ கதை–‘2:-
சிவனுக்கும் ஐந்து தலை; பிரம்மாவுக்கும் ஐந்து தலை; இதனால் குழப்பம் அடைந்த பார்வதி சிவன் என்று நினைத்து பிரம்மா அருகே சென்றதாகவும், உடனே சிவன் கோபம் அடைந்து ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்ததாகவும் கூறப்படுகின்றன.

☆ சிவன் கையிலுள்ள கபாலம் பிரம்மாவின் கபாலம் (தலை) என்றும் கூறுவர்.

☆ பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். நீலநிற மேனியரான பைரவர்தான் பிரம்மனின் தலையை கொய்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here