Boys Movie Manikandan in Latest Photo

குடிப்பழக்கத்தால் ஹிட் படங்களில் வாய்ப்பு கைவிட்டுப் போன நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க உள்ளார் பாய்ஸ் பட மணிகண்டன்.

Boys Movie Manikandan in Latest Photo : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பாய்ஸ்.

திருப்பதி ஏழுமலையானுக்கு, இன்றுமுதல் நவநீத சேவை சமர்ப்பணம்.!

சித்தார்த், நகுல், ஜெனிலியா, ஸ்ரேயா பலர் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மணிகண்டன். அதன்பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

ஆதரவற்றவர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய விஷால் – வைரலாகும் வீடியோ..! | Vishal Birthday Celebration

குடிப்பழக்கத்தால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் இரவு பகல் பாராமல் குடித்துக் கொண்டே இருந்தேன். உடல் எடை கூடிவிட்டது. பின்னர் கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய எடையை குறைத்தேன் என கூறியுள்ளார். பாய்ஸ் படத்தில் நடித்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என திமிராக இருந்து விட்டேன். ஆனால் தற்போது வாய்ப்பு தேடி அலையும் போது தான் கஷ்டம் தெரிகிறது. பத்து வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா நடிப்பில் உருவாக உள்ள பஹூரா படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார். இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.