cctv

மூன்று வயது சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 2வது மாடியிலிருந்து ஒரு சிறுவன் தவறி விழுந்துவிட்டான். அதேநேரம், அந்த சாலை வழியாக ரிக்‌ஷாவை தள்ளிக்கொண்டு ஒருவர் வந்தார். மேலேயிருந்து கீழே விழுந்தை சிறுவன் சரியாக ரிக்‌ஷாவின் இருக்கையில் விழுந்து கொஞ்சம் கூட காயமின்றி தப்பினான்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சிறுவன் உயிர் பிழைத்ததற்கே ரிக்‌ஷாகாரரே காரணம் என்பதால், அவருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த சிறுவனின் பெற்றோர் அவருக்கு புது துணிகள் வாங்கிக்கொடுத்ததோடு இனிப்புகளையும் கொடுத்தனர்.