Box Office King Of Tamil Cinema
Box Office King Of Tamil Cinema

பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான் என தெரிவித்துள்ளார்.

Box Office King Of Tamil Cinema : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதலிடத்தில் இருப்பது யார்? என்ற விவாதம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மேலும் கடந்த சில வருடங்களாக தளபதி விஜய் தான் அதிக வசூலை கொடுக்கும் நாயகனாக இருந்து வருகிறார்.

எல்லாம் ஓவர், தளபதி விஜயின் மாஸ்டரும் OTT ரிலீஸ்.. விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல பத்திரிக்கை.!!

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி விஜய் தான். அவருக்குப் பிறகு தான் ரஜினி, அஜித் என மற்ற நடிகர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் இறுதியாக வந்த பிகில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 152 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்பிறகே பாகுபலி 2, விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து இருப்பதாக தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் விஜய் இப்போ முதலிடத்தில் இருந்தாலும் கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து ஒரே ஆளாக ரஜினி மட்டுமே முதலிடத்தில் இருந்தார் என்பதை மறந்து விடாதீர்கள்.

ரசிகர்களுக்கு இடையே சண்டையை மூட்டி விடாதீர்கள் என கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.