bottle gourd payasam recipe 
bottle gourd payasam recipe 

bottle gourd payasam recipe :

தேவையான பொருட்கள் :

1. பால் – 3 கப்

2. ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்

3. குங்கும பூ – சிறிது

4. சர்க்கரை – தேவைக்கு

5. சுரக்காய் துருவியது – 1 கப்

6. நெய் – 5 ஸ்பூன்

7. பாதம், முந்திரி – சிறிது

செய்முறை :

3 கப் கெட்டியான பாலை மிதமான சூட்டில் கலந்துவிட்டு அது பாதியாக குறையும் வரை அப்படியே சூடு செய்ய வேண்டும். பாதியாக குறைந்ததும் அதில் ஏலக்காய் பொடி தூவி, சிறிது குங்கும பூ போட்டு கலக்கி விட வேண்டும். பிறகு அதில் சர்க்கரை போட்டு கலக்க வேண்டும்.

சுரக்காயை விதைகள் நீக்கி அதனை துருவி கொள்ள வேண்டும். துருவிய சுரக்காயில் அதிக நீர் இருக்கும் அதனால் அதனை பிழிந்து நீரை நீக்கிவிட்டு அதனை ஒரு வாணலில் நெய் விட்டு அதில் பிழிந்து வைத்துள்ள சுரக்காயை பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பால் நன்றாக காய்ந்து குறைந்ததும் இத்துடன் வதக்கிய சுரக்காய்யை போட்டு கலக்கி விட்டு பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பாதம் தூவி பரிமாறினால் சுவையான சுரக்காய் பாயாசம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here