Border Movie Title Issue

பார்டர் திரைப்படம் டைட்டில் பஞ்சாயத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Border Movie Title Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் பார்டர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது பார்டர் படத்தின் டைட்டில் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நடிகர் தீனா நடிப்பில் ஏற்கனவே பார்டர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி சென்சார் வரை சென்றுள்ளது.

இதனால் அருண் விஜயின் பார்டர் திரைப்படம் டைட்டில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தினை அறிவழகன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.