Border Movie Release

அந்தப் படத்தினை மட்டும் OTT-யில் ரிலீஸ் செய்யாதீங்க என தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

Border Movie Release: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க மிகவும் போராடினார்.

அதன் பின்னர் தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் அவருக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அருண் விஜய்க்கென தனி மார்க்கெட் உருவானது. மேலும் அருண் விஜய் அறிவழகன் இயக்கியுள்ள பார்டர் திரைப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமென நம்பியுள்ளார்.

ஆனால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக தயாரிப்பாளர் இந்த படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட முடிவு செய்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை கொண்ட அருண் விஜய் தயவுசெய்து இத்திரைப்படத்தை OTTயில் வெளியிட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.

கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்க்கலாம் என கூறியுள்ளார். இதனால் தயாரிப்பு நிறுவனம் எப்படியான முடிவை எடுக்கும் என தெரியவில்லை. படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது OTT-ஆ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.