Boomerang Movie Review

Boomerang Movie Review : ஆர். கண்ணனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பில் அதர்வா, ஆர்.ஜே பாலாஜி, சதிஷ், மேகா ஆகாஷ், இந்துஜா, மொட்டை ராஜேந்திரன் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பூமராங்.

படத்தின் கதைக்களம் :

கால்பந்து போட்டியாளரான அதர்வா படத்தின் ஆரம்பத்தில் ட்ரக்கிங் ( மலை ஏறுதல் ) சென்றிருந்த போது கட்டு தீ ஏற்பட்டு முகம் முழுவதும் சிதைந்து விடுகிறது. இதனால் மரண படுக்கையில் உள்ள ஒரு இளைஞரின் முகத்தை மாற்று அறுவை சிகிக்சை மூலமாக அதர்வாவிற்கு பொறுத்துகின்றனர்.

அதன் பின்னர் அந்த முகத்தால் அதர்வாவுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் என்ன? இறந்து போன அந்த இளைஞர் யார்? இதனையெல்லாம் அதர்வா எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

கதையை பற்றிய அலசல் :

வித்தியாசமான திரைக்கதை, சமூக கருத்துகள் நிறைந்த படமாக ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அதர்வாவுக்கு இப்படம் நிச்சயம் சிறந்த பெயரை பெற்று கொடுக்கும் படமாக அமையும் என்பது உறுதி.

விவசாயத்தையும் நதி நீர் இணைப்பை பற்றியும் அதில் நடக்கும் அரசியலை தைரியமாக பேசியது பாராட்ட வேண்டிய விசியம்.

அதர்வா :

சக்தி, சிவா என இரண்டு அதர்வா வேடத்திலும் அசத்தியுள்ளார். அரசியல் சார்ந்த வசனங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதியும் வகையில் அமைந்துள்ளது. வசனங்களுக்கு பல இடங்களில் கிளாப்ஸ் அள்ளுகிறது .

ஆர்.ஜே பாலாஜி :

படத்தின் இரண்டாம் பாதியில் ஆர்.ஜே பாலாஜி அதர்வாவுடன் பயணிக்கிறார். வெறும் காமெடியனாக இல்லமால் ஒரு வலுவான அதர்வாவுக்கு கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சதிஷ் :

படத்தின் முதல் பாதியில் அதர்வாவுடன் பயணிக்கிறார். அவருடைய வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

மேகா ஆகாஷ், இந்துஜா :

மேகா ஆகாஷ் சிவா என்ற அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்துஜா சக்தியின் தோழியாக நடித்துள்ளார். இருவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

தொழில் நுட்பம் :

இசை :

ரதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் அமைந்து கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பாடல்களும் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

பிரசன்னா குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிட்டி, விலேஜ் என இரண்டிலும் தன்னுடைய திறமையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

ஆர்.கே செல்வா இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

ஆர்.கண்ணன் படத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டுமோ அப்படி கொஞ்சமும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

விவசாயத்தையும் பற்றியும் நதி நீர் இணைப்பை பற்றியும் ஸ்டாராங்காக கொடுத்துள்ளார். விவசாயமும் அதன் பின் நடக்கும் அரசியல் பற்றிய வசனங்களுக்கு கிளாப்ஸ் குவிகிறது.

தம்ப்ஸ் அப் :

1. கதை
2. திரைக்கதை
3. அதர்வா, ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு
4. விவசாயம், நதி நீர் இணைப்பு பற்றி பேசியது.
5. வசனங்கள்

தம்ப்ஸ் டவுன் :

குறைகள் என சொல்லும் அளவிற்கு பெரியதாக எதுவும் இல்லை

REVIEW OVERVIEW
பூமராங் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
boomerang-movie-reviewமொத்தத்தில் பூமராங் விவசாயத்தையும் நதி நீர் இணைப்பு பற்றியும் ஆழமாக பேசும் படம். குடும்பத்துடன் பார்த்து பாராட்ட வேண்டிய படம்.