Boney Kapoor Tweet About VakkeelSaab
போனி கபூரின் டீவீட்டால் அஜித் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

Boney Kapoor Tweet About Vakkeel Saab : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு எவ்வளவு கெஞ்சியும் வினோத்தும் சரி போனி கபூரும் சரி அப்டேட் கொடுப்பதாக இல்லை.

மாஸ்டர் டீஸர் எப்போது?? மேடையில் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான புகைப்படங்கள் மட்டும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருந்தன. ஆனாலும் படத்தை பற்றிய அப்டேட் தெரிந்து கொள்ள ஆர்வம் குறையவில்லை.

இந்நிலையில் தற்போது போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் பற்றி பதிவிட்டுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் இதுக்கெல்லாம் மட்டும் அப்டேட் கொடுக்க தெரியுது, வலிமை பத்தி கேட்டா மட்டும் வாயை துறக்க மாட்டீங்களா? என அவரிடம் வலிமை அப்டேட் கொடுங்க என கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.