தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகள் ஜான்விகபூர் குறித்து வெளியான வதந்திக்கு பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவரது தயாரிப்பில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் மீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பான பதிவுகளை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வரும் போனி கபூர் தற்போது தனது மகளும் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையுமான ஜான்வி கபூர் தமிழ் படங்களில் நடிப்பதாக குறித்து வெளியான வதந்திகள் பற்றின முக்கியமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், அன்பான ஊடக நண்பர்களே, ஜான்வி கபூர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.