நடிகை ஜான்வி கபூரை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என தந்தை போனி கபூர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தனது அழகாலும் நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்த இவர் மறைந்த பிறகு ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் திரை உலகில் நடிக்க தொடங்கினார்.

ஸ்ரீதேவியுடன் ஒப்பிட வேண்டாம்!!.. போனிக்கபூரின் வேண்டுகோள்!.

தற்போது முன்னணி நட்சத்திரமாக திகழ்வதற்கு முயற்சி செய்து வரும் ஜான்விகபூரை அவரது அம்மாவான ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு பேசி வருவது குறித்து ஜான்வி கபூரின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனிக்கபூர் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

ஸ்ரீதேவியுடன் ஒப்பிட வேண்டாம்!!.. போனிக்கபூரின் வேண்டுகோள்!.

அதாவது அவர் கூறியது, ஒவ்வொருவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு அதன் ஒரு பகுதியாக மாற வெவ்வேறு வழிகளை கையாள்வார்கள் என்று கூறியிருக்கிறார், மேலும் என் மகள் இப்போதுதான் சினிமாவில் நுழைந்திருக்கிறார். அவருடைய நடிப்பை அவரது அம்மாவுடன் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.