அஜித்துடன் கூட்டணி போட உள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர்.

Boney Kapoor Meet With Mohanlal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.

அஜித்துடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தல 61 படம் பற்றி வெளியான மாஸ் தகவல் - தீயாக பரவும் புகைப்படம்

விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 61 என்ற படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இடம் இந்த படத்தில் நடித்ததற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்துடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தல 61 படம் பற்றி வெளியான மாஸ் தகவல் - தீயாக பரவும் புகைப்படம்

இதனை உறுதி செய்யும் வகையில் மோகன்லால் மற்றும் போனிகபூர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.