உண்மையில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் என்ன என தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
எச். வினோத் இயக்கிய இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்த பேட்டி ஒன்றில் நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூல் செய்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக தமிழகத்தில் நல்ல வசூல் என குறிப்பிட்டுள்ளார்.