வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

Boney Kapoor About Valimai Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரானா வைரஸ் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி வரை இந்த கட்டுபாடு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

என் கணவரே Correct ஆனா ஆளானு யோசிக்க வச்சது – பிரபல நடிகை Latha Rao ஓபன்டாக்..!

இதனால் வலிமை திரைப் படம் வெளியாகுமா ஆகாதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதேபோல் 7-ஆம் தேதி வெளியாக இருந்த ராஜமவுலியின் RRR திரைப்படம் தள்ளிப் போனதால் வலிமையும் தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்தது.

எதற்காக இத்தனை கடவுளர்கள்? : சுவாமி விவேகானந்தர் விளக்கம்

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டபடி வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ‌‌