உடல் நலம் குறைவு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போண்டாமணி தனது மருத்துவ செலவிற்கு உதவிய நடிகர் தனுஷ்க்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து டாப் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.

மருத்துவமனையில் இருந்து தனுஷிற்கு நன்றி கூறிய பிரபலம்!!… உருக்கமான வீடியோ வைரல்!.

இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் போண்டாமணி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக உதவி அளித்துள்ளார். இதுகுறித்து நடிகர் போண்டாமணி வெளியிட்டு இருக்கும் உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் போண்டாமணி அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவரது சிகிச்சைக்கு யாராவது உதவ முன் வாருங்கள் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மருத்துவமனையில் இருந்து தனுஷிற்கு நன்றி கூறிய பிரபலம்!!… உருக்கமான வீடியோ வைரல்!.

இதனால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, மனோபாலா உள்ளிட்ட திரை பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போண்டாமணி அவர்கள் நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.