இரண்டு கிட்னியும் செயலிழந்து பிரபல காமெடி நடிகர் போண்டா மணி உயிருக்கு போராடி வருவதாக பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் போண்டாமணி. தற்போது 50 வயதுக்கு மேல் ஆகும் இவர் ஏற்கனவே ஒரு முறை உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இரண்டு கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணி.. கண்ணீருடன் பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ.!!

இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வரும் இவருக்கு உதவுமாறு காமெடி நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரண்டு கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணி.. கண்ணீருடன் பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ.!!

இதனால் ரசிகர்கள் பலரும் நடிகர் போண்டா மணி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் சக நடிகர்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.