இருதய கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர் போண்டாமணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் போண்டா மணி. நடிகர் வடிவேலு மற்றும் விவேக் என பிரபலமான காமெடி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இருதயக் கோளாறால் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல காமெடி நடிகர் அனுமதி.. வெளியான அதிர்ச்சித் தகவல்

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் திடீரென ஏற்பட்ட இருதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூர் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இருதயக் கோளாறால் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல காமெடி நடிகர் அனுமதி.. வெளியான அதிர்ச்சித் தகவல்

நடிகர் போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.