தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் பா ரஞ்சித். இவருக்கு சொந்தமான நிலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இவரது தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பொம்மை நாயகி. யோகி பாபு ஹீரோவாக நடிக்க கண்ணன் உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்களின் படங்களில் பணியாற்றிய அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் சுபத்ரா, ஹரி கிருஷ்ணன், ஜெயச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர். கே எஸ் சுந்தர மூர்த்தி என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க சார்பட்டா பரம்பரை படத்தில் எடிட்டராக பணியாற்றிய செல்வா இந்த படத்திலும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ‌

யோகி பாபு திரைப்பயணத்தில் இந்தத் திரைப்படம் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.