Bombay Chutney Recipe | Bombay Chutney | Indian Recipe, Easy Rice Recipe | Dinner Ideas, Easy Recipe | Veg Recipes of India

Bombay Chutney Recipe :

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா 2,
பச்சை மிளகாய் – 4,
பூண்டு – 2,
மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா ஒரு சிட்டிகை,
இஞ்சி – சிறிய துண்டு, கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
உளுந்து – ஒரு டீஸ்பூன்,
மல்லித் தழை – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தாள் வடை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளலாமா!

1) வாணலியில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கடலைப் பருப்பு, உளுந்து சேர்த்து வதக்குங்கள்.

2) பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

3) தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடுங்கள். வெந்ததும் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். அனைத்தும் சேர்ந்து வந்ததும் தாளித்த பொருட்களைச் சேர்த்து இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள்.

4) இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here