Bomb Threat to Governor House
Bomb Threat to Governor House

Bomb Threat to Governor House – சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்மநபர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் கடிதம் அனுப்பிய நபரை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் தமிழக காவல்துறையினர், பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கடந்த 21 -ஆம் தேதியன்று ஆளுநர் பன்வாரிலாலுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில் ‘ஆளுநரை தகாத வார்த்தைகளில் வசைப்பாடியும், ஆளுநர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் ‘ எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடிதம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் உள்ள அலுவலர்கள் கிண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.

இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடடினயாக காவல்துறையினர், ஆளுநர் மாளிகைக்கு சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

ஆனால், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் போலி என தற்சமயம் தெரிய வந்தது. இதையடுத்து, ஆளுநர் மாளிகைக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றனர். மேலும், அந்த கடிதத்தில் முகவரி எதுமின்றி சரவண பிரதாப் என்ற பெயர் மட்டும் காணப்பட்டது.

எனவே, சரவண பிரதாப் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட யாரேனும் இதுபோன்ற மிரட்டல் கடிதத்தை அனுப்பி இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.